[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

anbumani-ramadoss-demand-to-take-action-for-release-of-tn-fishermen

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்வதும் அவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் என சாடியிருக்கிறார்.

மீனவர்களை தாக்கக் கூடாது என இலங்கை அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், இதுபோன்ற அத்துமீறல்களில் அந்நாட்டு அரசு ஈடுபடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது அத்துமீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசிடம் இந்தியா எச்சரிக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close