[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

பாலாறு தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை: அரசியல் தலைவர்கள் இரங்கல்

farmer-sreenivasan-suicide-political-leaders-condolence

பாலாறு தடுப்பணையில் குதித்து விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, பாலாற்றில் இனி தண்ணீர் வராது என்ற வேதனையில் விவசாயி சீனிவாசன் புல்லூர் தடுப்பணையில் விழுந்து நீரில் மூழ்கி இறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திராவின் நடவடிக்கையை மத்திய அரசு வழக்கம்போல வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தண்ணீர் பிரச்னையை தீர்த்து, விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close