[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தடுப்பணையில் தவறி விழுந்து விவசாயி சீனிவாசன் உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க ஜெயலலிதா உத்தரவு

jayalalithaa-announced-rs-3-lakhs-compensation-for-farmers-family-who-fell-into-the-river

விவசாயி சீனிவாசன், தடுப்பணையில் வேடிக்கை பார்த்தபோது தண்ணீரில் தவறிவிழுந்து இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த விவசாயி சீனிவாசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பாலாறு தடுப்பணை விவகாரத்தில் ஆந்திராவுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close