[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடக்கம்: பன்னீர்செல்வம்

tn-finance-minister-o-pannerselvam-explains-about-mineral-sand-sale-in-assembly

தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பன்னீர்செல்வம், சிறு, குறு தொழில்துறைகளில் போடப்பட்டுளாள் ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எதிர்கட்சிகள் குறிப்பிட்டபடி, நிதி பற்றாக்குற‌யை குறைத்து காட்டவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என கூறினார். மாநில அரசு கடன் வாங்கித்தான் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இந்த நிலை எதிர்காலத்தில் மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் பேரவையில் தெரிவித்தார். புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close