[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு எதிர்ப்பு: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

dmk-walk-out-from-tn-assembly

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவைகுறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை அவை தொடங்கியதும், நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மனியன் தெரிவித்த கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுகவின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனநாயக கடமையை ஆற்றுவது சரியாக இருக்காது என அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குவதாக சபாநாயகர் தனபால் உறுதியளித்தார். அதனை உடனே அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். உடனடியாக உத்தரவு வழங்கவேண்டும் என தம்மை யாரும் வ‌ற்புறுத்தமுடியாது என சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close