[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

கனவு நாயகன் கலாமும், அவரது நினைவலைகளும்..!

celebrates-about-kalam

ஏவுகணைத் திட்டத்திற்கு அக்னி சிறகு மாட்டி இந்தியக் கனவுகளை விண்ணில் செலுத்திய அறிவியல் பிரம்மா. எளிமையின் சிகரமாய் உயர்ந்து இந்தியாவை உலகிற்கு அடையாளம் காட்டிய கனவு நாயகன். பதவிக்கு அப்பாற்பட்டு உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மாமேதை. இளைஞர்களின் உந்து சக்திக்காக தனது இறுதி மூச்சையும் பரிசளித்த பாரதத் திருமகன் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெருமைகள், சிந்தனைகள், செயல்பாடுகள், கனவுகளைப் பற்றி அவரை அறிந்த பிரபலங்களின் உருக்கமான பகிர்வு இது..

கலாமை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது பெரியாரா?: நெல்லைக்கண்ணன்

ஒரு மேன்மையான மனிதர் இறந்து விட்டார். ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் தலைவர்களை நினைத்தால் பயமாகவும், அச்சமாகவும் இருக்கிறது. மணமாகாமல் நாட்டுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் அப்துல் கலாமும், காமராஜரும் தான். அதுவும் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நமக்குப் பெருமை. ஏழையாக இருந்து உட்சபட்ச பதவிக்கு முன்னேறியது பெரிய விஷயமில்லை. ஆனால், அந்தப் பெரும் பதவிகளுக்கு வந்த பிறகும் தவறுகள் செய்யாமல் உத்தமாக வாழ்வது தான் பேரதிசயம். அவர் கனவு காணுங்கள் என்று அவர் சொல்லும் நான் கூட ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் சொன்னது தூங்கிக் கொண்டு அல்ல. தூங்காமல் கனவு காணுங்கள் என்று சொல்லியதாக இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறார்.

இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவித்து வந்த அவர் மாணவர்களுக்கிடையில் உரையாற்றும்போது இறந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அநாகரீகத்துக்கும், அநீதிக்கும் துணைபோகும் இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு நேர்மையான தலைவர் இனியும் இந்தியாவில் உருவாவது சாத்தியமே இல்லை. அதனால் தான் அவரது மரணத்திற்கு இந்தியாவே கண்ணீர் சிந்துகிறது.

இருக்கும்வரை இவரைப்பற்றியும் இவர் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையைப் பற்றியும் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நேர்மையான, ஒழுக்கமான, நம்பிக்கையான இவரைப்போல ஒரு தலைவர் வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள் என்பதை கலாமின் மரணம் உணர்த்தி விட்டது. 2020 வதில் அவர் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்று இளைஞர்கள் இப்போது உறுதி ஏற்று இருக்கிறார்கள்.

அப்துல் கலாமுக்கும் அரசியல் ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அதை தடுத்து நிறுத்தியவர் தந்தை பெரியார். கலாம் படிப்பு முடித்து வேலையில் அடிய்டுத்து வைத்த காலகட்டம். அப்போது பெரியாரைச் சந்தித்த அவர், அரசியலுக்கு வரவேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அப்போது, நீ பெரிய, பெரிய பதவிகளை அடைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று தடுத்திருக்கிறார் பெரியார். அரசியல்வாதிகள், கலாம் பெரியரில் அதை நிறுவ வேண்டும், இதை நிறுவ வேண்டும் என்று இப்போது கொக்கரித்து வருகிறார்கள். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஊர் ஊராக அப்துல்கலாம் பெரியரில் மன்றங்களை அமைத்து அவரது கனவை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அது தான் அவருக்கு செய்யும் பெரிய மரியாதியாக இருக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close