[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.... திருமாவளவன் பேட்டி

swathi-s-murder-might-be-honour-killing-thol-thirumavalavan

இளம்பெண் சுவாதி ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமீறியதாக தொடரப்பட்ட வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஸ்வாதி கொலை வழக்கில்‌ பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், ஆனால் எச்.ராஜா அதனை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

ராம்குமார் தான் கொலையாளி என்று சொல்லிவிட்டு, பிலாலிடம் ஒருவாரம் விசாரணை நடத்த என்ன காரணம்? என்று தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close