[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இரக்கமின்றி பிரம்பால் அடித்த ஆசிரியர் : 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் அனுமதி

school-teacher-beat-4th-std-boy-by-stick-he-was-admitted-in-hospital

சத்தியமங்கலம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வகுப்பு ஆசிரியரால் பிரம்பால் அடிக்கப்பட்ட 4-ஆம் வகுப்பு மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்த சின்னச்சாமி - ககன்யா தம்பதியின் மகன் மதியரசு (9). இவர் தங்கள் கிராமத்தில் உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றய துவக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியரசு நேற்று வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது வகுப்பாசிரியர் ஆறுச்சாமி மாணவரை சிறுவன் என்றும் பாராமல் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது.

இதனால் காலில் காயத்துடன் வீட்டுக்கு சென்றுள்ள மதியரசு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து மதியரசின் தந்தை சின்னச்சாமி புன்செய் புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் மாணவர் மதியரசு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பவானிசாகர் வட்டார கல்வி அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தலைமையாசிரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறினார். மேலும் அறிக்கை பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close