கோவையில் உள்ள கனரா வங்கி கிளையில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்து மேலாளரை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் வெற்றிவேலன் என்பவர் கடன் பெற விண்ணப்பித்ததாக தெரிகிறது. ஆனால், வங்கியின் மேலாளர் கடன் தர மறுத்ததால், குணபாலன் என்ற இடைத்தரகர் மூலம் கடன் பெற முயற்சித்ததாகவும், அதற்காக இடைத்தரகருக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இதுவரை வங்கியில் கடன் பெற்று தராததால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன், துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கியில் புகுந்து இடைத்தரகர் குணபாலனை தாக்கினார். அப்போது அதை தடுக்க முயன்ற தலைமை மேலாளர் சந்திரசேகர் மீதும் தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், வெற்றிவேலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்