[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

டியூசன் சென்று திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - 73 வயது முதியவர் கைது 

ambattur-child-abuse-case-73-years-old-man-arrested

அம்பத்தூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 73 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள லெனின் நகர், 2வது மெயின் ரோட்டில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதிலும் 10 வயதிலும் என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலையில் இரு சிறுமிகளும் வீட்டிலிருந்து டியூசனுக்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. 

பின்னர், இவர்கள் இருவரும் இரவு டியூஷன் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் லெனின் நகர், 10வது மெயின் ரோட்டில் வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) என்பவர்  10 வயது சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளார். அதன் பின்னர், அவர் கன்னத்தில் முத்தமிட்டு பாலியல் தொல்லை செய்து உள்ளார். 


இதனையடுத்து இரு சிறுமிகளும் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனே சுந்தரமூர்த்தி அந்தச் சிறுமியை அங்கேயே  விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. விரைந்து வந்த பொதுமக்கள் இரு சிறுமிகளையும் மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.  சிறுமிகள் வீட்டில் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 

அதனையடுத்து பெற்றோர் நேற்று அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தி தேடிவந்தனர். பின்னர், போலீசார் தலைமறைவான அவரைக்  கைது செய்தனர். இதன் பிறகு, போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close