கோவையில் 17 பேரின் உயிரை பறித்த அந்த சுற்றுச் சுவர், தீண்டாமை சுவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கல்லால் கட்டப்பட்டது. அந்த சுற்றுசுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்த கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்த சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது அதிகாலை 3.45 மணியளவில் விழுந்தது. அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரமட்டமாயின.
கன மழை பெய்து வந்ததாலும், அனைவரும் உறங்கும் நேரம் என்பதாலும் அருகில் இருந்த வீடுகளில் இருப்பவர்களுக்கே விபத்து நடந்து ஒன்றரை மணி நேரம் கழித்துதான் தெரிய வந்திருக்கிறது. சுற்றுசுவர் விழுந்ததால் தரைமட்டமான அந்த வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்புகளுக்கு காரணமான சுவற்றிற்கு பின்னணியில் ஒரு கதை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம், போலீசார் விரட்டியடிப்பு
தகவலின் படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியைச் சேர்ந்த ஜவுளிக் கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவர், தமது வீடு அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் இடத்தின் ஒரு பகுதியில் ராட்சத கருங்கற்களால் ஆன சுற்றுச் சுவரை எழுப்பியுள்ளார். ஆதி திராவிடர் காலனி பகுதியை ஒட்டி, 80 அடி அகலம், 20 அடி உயரத்திற்கு எழுப்பியதாக கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படும் சுற்றுச் சுவரிலிருந்து, குழாய் மூலம் பல ஆண்டுகளாக கழிவு நீரும் வெளியேறிப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். இந்த சுவரை அப்போதே இடிக்கச் சொன்னதாகவும், ஆனால் உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும் மக்கள் கொதிக்கின்றனர். மக்களின் எதிர்ப்பை மீறி சுற்றுச் சுவரை எழுப்பிய சிவசிப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், சாதிய உணர்வால் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இம்மாத இறுதிக்குள் இந்தியா வரும் 17 ஆயிரம் டன் வெங்காயம்
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!