[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஆடு மேய்க்க சென்ற பெண் வெட்டிக் கொலை - குற்றவாளிகளை தேடும் போலீஸ் 

sheep-worker-woman-murder-in-pudukkottai

புதுக்கோட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள தேனிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது இரண்டாவது மனைவி பானுமதி(45). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பானுமதி வழக்கமாக தினசரி தேனிப்பட்டி அருகே உள்ள தென்னதிரையன்பட்டி ஆர்எஸ் பதி காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பானுமதி ஆடு மேய்க்க ஆர்எஸ் பதி காட்டிற்குள் சென்றுள்ளார்.

இதனையடுத்து மாலை பானுமதி வீடு திரும்பாமல் அவருடன் சென்ற ஆடுகள் மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளன. வழக்கமாக எப்போதும் ஆடுகளுடனே வரும் பானுமதி நேற்று வரவில்லை என பதறிய அவரது குடும்பத்தினர், ஆர்எஸ் பதி காட்டிற்குள் சென்று தேடியுள்ளனர். அப்போது பானுமதி அங்கு அரிவாளால் பல இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததாக தெரிகிறது.

மேலும் பானுமதி சடலம் கிடந்த இடத்தில் தண்ணீர் ஓடியதால் அவரது ரத்தம் தண்ணீரில் கலந்து ரத்த ஆறாக ஓடியதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் இந்தச் செய்தி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதையடுத்து ஏராளமானோர் அந்தப் பகுதிக்கு வரத்தொடங்கினர். உடன் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஏடிஎஸ்பி இளங்கோவன் தலைமையிலான கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கொண்டு பானுமதி சடலம் கிடந்த இடத்தில் இருந்த செருப்பு, தொப்பி உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார் பானுமதி எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? யார் அவரைக் கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பானுமதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடல்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆடு மேய்க்க சென்ற பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close