[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழை!

various-parts-of-tn-receive-heavy-rainfall-yesterday-night

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், வடபழனி, பாடி, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மாநகரம் முழுவதும் பெய்த மழையால் சாலைகள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையின் காரணமாக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, வடகரை கிராமத்தில் பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பூம்புகார்-கல்லணை பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 14 ஆயிரம் கன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், கோவை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது.

இதையும் படிக்கலாமே: 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close