[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மதிப்பெண் குறைவிற்கு தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

student-commits-suicide-by-falling-on-train-in-coimbatore

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவரை தந்தை திட்டியதால், மனமுடைந்த அம்மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

கோவை லெனின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தீஸ்வரன். இவர் மரவேலை செய்து வருகிறார். இவரது மகன் அபினேஷ் கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த தேர்வில் ஒரு  பாடத்தில் அபினேஷ்வர்  குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது தந்தை அபினேஷை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த நிலையில் அபினேஷ் காணப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் அபினேஷ்வர் நேற்று மாலை டியூஷன் சென்று விட்டு இரவு வீடு திரும்பவில்லை. பதட்டம் அடைந்த பெற்றோரும், அவரது உறவினர்களும், அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். மேலும் சரவணம்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர். பீளமேடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி சிறுவன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கும் தகவல் வந்தது. 

இதனையடுத்து, அபினேஷின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது அவர்களது மகன் என தெரியவந்தது. மேலும் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அபினேஷ்வர்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவன் பெற்றோர் திட்டியதால் ரயில்வே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close