[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-tamilnadu

தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் இடிந்து விழுந்த மண்வீடு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு   

அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close