[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

சென்னையில் 2௦ கிலோ போதைப்பொருள் பறிமுதல் இருவர் கைது

twenty-kilos-of-ketamine-drug-seized-in-chennai-two-arrested

சென்னையில் 20 கிலோ கேட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சிக்கந்தர் அலி, முகமது சதாம் உசேன் ஆகியோரை சோதனை செய்தபோது,‌ அவர்களிடம் 10 கிலோ கேட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் கேட்டமைன் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கேட்‌டமைனை பறிமுதல் செய்து, வீட்டுக்கு சீல் வைத்தனர். வீட்டிலிருந்து 100 கிலோ செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சபுர் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். 20 கிலோ கேட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய குடியுரிமைத் துறை மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close