[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மயானம் செல்ல உரிய பாதை இல்லை - சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

there-is-no-way-to-go-to-the-cemetery-in-thiruvannamalai

திருவண்ணாமலை அருகே மயானம் செல்ல உரிய பாதை இல்லை எனக்கூறி பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேதபுரிஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் கட்டிட வெல்டிங் செய்யும் ஊழியர் ஸ்ரீனிவாசன் (40). இவர் ஆம்பூரில் கட்டிடத்தின் மேலே நின்று வெல்டிங் வேலை செய்யும் போது, தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து இவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல் அவதிப்படுவதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 20 வருடங்களாக இறந்தவரின் சடலத்தை கொண்டு  செல்ல இப்பகுதியில் பாதை இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். 

இதனால் உரிய பாதை அமைத்து தரக்கோரி ஆரணி - சேத்துப்பட்டு சாலை அருணகிரி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் உறவினர்கள் ஸ்ரீனிவாசன் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close