விபத்து ஏற்படுத்திய பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் ஐய்யம்பெருமாம் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 5ஆம் தேதி அரியானூர் பகுதியில் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டி வந்த பெண் மருத்துவர் மோதியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்ததாக தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக கொண்டாலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்தியது பெண் மருத்துவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட தங்களிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக மணிகண்டனின் மனைவி தேன்மொழி குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் மதுபோதையில் தனது கணவர் வாகனத்தில் மோதிய பெண் மருத்துவர் மீது கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எனக் கூறி வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென இன்று மணிகண்டன் மற்றும் தேன்மொழி ஆகியோர் தங்கள் கைக் குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை