[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

காய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து உடலுக்குள் சிக்கியது..  சீர்காழியில் அதிர்ச்சி

nagapattinam-district

நாகை மாவட்டம் சீ‌ர்காழியில் காய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து பெண்ணின் உடலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்‌ நடந்துள்ளது.

ஈசானிய தெருவைச் சேர்ந்த பார்வதி என்பவர்‌, தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி ‌‌காய்ச்சல் காரணமாக அருகிலுள்ள ஆரம்ப சு‌காதார நிலையத்திற்கு சென்ற பார்வதிக்கு செவிலியர் ஊசி போட்டுள்ளார். அப்போது ஊசி உடைந்து உள்ளேயே‌ சிக்கிக் கொண்டதாகவும், இதனை மருத்துவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும் அவர் வலியால் துடித்து வந்ததால் சில நாட்களுக்கு பின்னர் மருத்துவர்கள் பார்வதியின் வீடு தேடி வந்து அவரை அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போது ஊசி உடைந்து உள்ளேயே சிக்கியுள்ளதாகவும், ஆழமாக சென்றுவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ஊசியை எடுக்க சீர்காழியில் போதிய வசதிகள் இல்லை எனக்கூறி, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். 

ஆனால் சிதம்பரம் சென்று சிகிச்சைபெறும் அளவிற்கு போதிய வசதி இல்லை என பார்வதி வேதனை தெரிவிக்கிறார். உடலுக்குள் உடைந்த நிலையில் இருக்கும் ஊசியை அகற்ற அரசு உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close