திருப்பூர் அருகே மிக்ஸியை விற்று மது அருந்திய கணவனை கட்டையால் தாக்கி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவரும், இவரது மனைவி உமாதேவியும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனுக்கு, காயம் ஏற்பட்டதையடுத்து வீட்டில் இருந்தவாறு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். நாளடைவில் மது பழக்கத்திற்கு அடிமையான அவர், வீட்டில் இருந்த பொருட்களை விற்று மது அருந்தி வந்ததாக தெரிகிறது.
கடந்த 17-ஆம் தேதி வெங்கடேசன் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததாக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் விபத்து வழக்காக பதிவு செய்தனர். சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், வெங்கடேஷ் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
மனைவி உமாதேவி மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கட்டையால் தாக்கியதை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மிக்ஸி காணாமல் போனது குறித்து உமாதேவி கேட்டதற்கு, அதனை விற்று தான் மது வாங்கி குடித்ததாக வெங்கடேசன்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமாதேவி அருகில் இருந்த கட்டையால் வெங்கடேசனை தாக்கியுள்ளார். விபத்து ஏற்பட்டதாக அருகில் இருந்தவர்களையும் நம்ப வைத்து வெங்கடேசனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உண்மை சொன்னால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று எண்ணி அதனை மறைத்துள்ளார் உமாதேவி. கணவரை கொன்று நாடகமாடிய உமாதேவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்