நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் இன்று உதயமாகிறது. புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, உரையாற்றவுள்ளார்.