[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

இன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்

cm-to-inaugurate-tenkasi-district-formally-today

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் இன்று உதயமாகிறது. புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, உரையாற்றவுள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close