[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? - முதல்வர் பழனிசாமி பதில் 

edappadi-pazhanisamy-speech-about-bjp-alliance

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதைத்தொடந்து தற்போது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு கொண்டுவந்த மறைமுகத்தேர்தலுக்கும் பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், கூட்டணி குறித்து டெல்லி பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் யாரும் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். 

Image result for எடப்பாடி பழனிசாமி பாஜக

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி இன்னும் தொடர்கிறது. அதிமுகவை சேர்ந்தவர் தமிழகத்தின் முதல்வராக 2021ல் வருவார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மறைமுகத்தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டுவந்ததே திமுகதான். உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது மறைமுக தேர்தலுக்கு சட்டம் கொண்டுவந்தார்” எனத் தெரிவித்தார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close