[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது..!

son-killed-his-father-in-koyambedu

கோயம்பேட்டில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் புவனேஸ்வரி நகர், லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். நேற்றிரவு கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது அவரது மகன் பாலாஜி குடிபோதையில் வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் கேட்டபோது தந்தை என்றும் பாராமல் சரமாரியாக அடித்ததில் தலையில் காயம் ஏற்பட்டு கோபாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது மகன் பாலாஜியை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close