[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

 “தகாத உறவை என்னால் விட முடியாது” - பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை 

man-suicide-who-attack-the-girl-about-illegal-relationship

தகாத உறவை முறித்து கொண்ட பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துளுக்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(30). இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதியும்(29) பணியாற்றி வந்துள்ளார். 

இதையடுத்து ரமேஷ்பாபுக்கும் பகவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் முருகனுக்கு தெரியவரவே பகவதியை கண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பகவதி வேலைக்கு செல்லாமல் ரமேஷ்பாபுவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்காக தூத்துக்குடி வந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு, கத்தியால் பகவதி கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

அப்போது சத்தம் கேட்டு வந்த ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷ்பாபுவை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். வயல்வெளி அருகே உள்ள நன்செய் நிலத்துக்குள் புகுந்து ரமேஷ்பாபு ஓடமுயற்சிக்கும் போதே தானும் கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர், மயங்கி கீழே விழுந்தார். 

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரமேஷ்பாபு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பகவதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close