[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

“பேசியபடி பாக்கி தொகையை கொடுத்து விடுங்கள்” - சுருக்கு கயிற்றுடன் கோபுரத்தில் ஏறிய முதியவர் 

old-man-protest-for-payment-in-salem

மேட்டூர் அருகே விவசாய நிலத்தில் டவர் அமைப்பதற்கு பேசியபடி தொகையை தரக்கோரி சுருக்கு கயிற்றுடன் உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி முதியவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் பகுதிக்கு உட்பட்ட செலவடை கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பவர் கிரிட் நிறுவனம் உயர் அழுத்த மின் கோபுரத்தை அமைத்துள்ளனர். இந்த உயர் அழுத்த மின் கோபுரம் அமைந்துள்ள இடத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாகவும் அவர் நிலத்தில் செல்லும் மின் ஒயர்கள் மற்றும் மரம் உள்ளிட்டவைகளுக்கு கூடுதலாக பணம் தருவதாகவும் உறுதி அளித்து முன்பணமாக ரூ 5 லட்சம் வழங்கி உள்ளனர். 

தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் மீதமுள்ள பாக்கி தொகையை கேட்டு கிருஷ்ணன் பலமுறை பவர் கிரிட் நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் கிருஷ்ணன் இன்று சுருக்கு கயிற்றுடன் அவர் நிலத்தில் அமைந்துள்ள உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். 

இதுகுறித்த பவர் கிரிட் நிறுவனம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் முதியவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கான பாக்கி தொகையை விரைவில் வழங்குவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து முதியவர் சமாதானம் அடைந்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close