[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மக்களவை தேர்தல் கூட்டணியே தொடரும் - துணை முதல்வர் ஓபிஎஸ்

aiadmk-loksabha-polls-coalition-continues-says-tn-deputy-cm-ops

மக்களவை தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “யார் கட்சி தொடங்கினாலும், எந்தவித பாதிப்பும் அதிமுகவிற்கு ஏற்படாது. அமெரிக்கா சென்றது அரசு முறை பயணமாக தான் இருந்தது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களோடு கலந்து பேசினேன். அத்துடன் அங்கு உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன். அவர்களும் இங்கே வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர். உலக வங்கியிடம் சென்று பேசியுள்ளோம். அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெற உள்ளது.

மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விஷயத்திற்கு நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளைத் சொல்லியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து புதிய கட்சிகளும் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு வலுவான இயக்கம். எங்கள் கட்சியில் நாங்கள் கலந்து பேசி தகுதியுள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு  தருவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close