[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ரஜினியோடு இணைவது எப்போது..?: கமல்ஹாசன் விளக்கம்

kamal-hassan-about-joins-with-rajinikanth

தமிழக நலன் கருதி தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் சென்றார். அங்கு சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு, நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய அவர்,  “ பல வருடங்களாக மக்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. 5 வயது முதல் நடிப்பில் இருக்கிறேன். பலர் கை தூக்கி விட்ட நிலையில் தான் இந்த மேடையில் இருக்கிறேன். நெகிழ்ந்து இருக்கிறேன்.

தொண்டர்கள் அன்பு, செயல் வடிவமாக மாற வேண்டும். இது தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய யாத்திரை வெற்றி பெறும். தேவைப்பட்டால் தமிழகத்தில் நலன் கருதி ரஜினியுடன் இணைவேன் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எப்போது இணைவோம் என்று தேதியெல்லாம் சொல்ல முடியாது. அப்படி இணையும்போது அதில் எங்கள் நட்பை விட முக்கியமான செய்தியாக தமிழகத்தின் நலன் இருக்கும் என்பதுதான்” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close