[X] Close
JUST IN

அவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்

if-need-means-me-and-rajini-will-joint-in-politics

தானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ‘கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் பேசியிருந்த இயக்குநரும், நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழகத்தின் நலனுக்காக ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close