[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் - அச்சத்தில் மலைக் கிராம மக்கள்

village-people-afraid-of-damaged-homes-in-covai

கோவையை அடுத்த ஆனைக்கட்டி மலை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளால் மலைக் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆனைக்கட்டி பகுதியில் 19 பழங்குடியினர் மலைக் கிராமங்கள் உள்ளன. அடர் வனப்பகுதியில் வசித்து வந்த இருளர் பழங்குடியின மக்களான இவர்கள் வன பாதுகாப்பு சட்டத்திற்கு பிறகு அடர் வனத்திலிருந்து விலகி விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் சலுகைகள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

19 மலைக் கிராமங்களில் ஒன்றான கண்டிவழி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் தற்போது அபாய நிலையில் அச்சுறுத்தி வருகின்றன. இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

இம்மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 17 வீடுகள் கட்ட தலா 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையால் பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

மழையில் நனையாமல் இருக்க, சமூக ஆர்வலர்களின் தற்காலிக உதவி மூலம் பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் கொண்டு வீடுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் த‌ங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க‌வேண்டும் என பழங்குடி‌மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close