[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

கழிப்பறை கட்ட எதிர்ப்பு - 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

women-attempt-suicide-in-dindigul

வீட்டின் அருகே கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் அருகே புளிய ராஜக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவர் வீட்டின் அருகே புதிதாக கழிப்பிடம் கட்ட முயன்றுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் தனம் தனது மூன்று  குழந்தைகளை அழைத்துக்கொண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தன் மீதும் மூன்று குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close