[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

‘பள்ளி பருவத்திலேயே திருமணம்.. கர்ப்பம்.. குழந்தைகள்’ - சிறுமிகளின் அவலநிலை !

child-marriage-in-kanchipuram-still-a-lot-to-be-done

இளம் வயதில் திருமணம் செய்துகொண்டு கர்ப்பமான பல சிறுமிகள், சட்டத்துக்கு பயந்து மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ளது புதுப்பட்டு கிராமம். அங்குள்ள மதுராந்தகம் ஏரி கரை ஓரத்தில் 15க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிறார்கள். அந்த இருளர் குடியிருப்பு பகுதியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13 வயது நிரம்பிய சிறுமிக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அவர் தற்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்ப காலத்தில் எடுக்கவேண்டிய தேவையான மருத்துவ பரிசோதனைகளை அந்த சிறுமி எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொண்டால் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படும் என்ற அச்சத்தினால் சிறுமியை யாரும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதில்லை என கூறப்படுகிறது.

இதே மாதிரியான சிறுமிகள் பலபேர் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு பின்னர் கர்ப்பமாகிய பின் பரிசோதனை ஏதுமின்றி வீட்டிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுமிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி பல குறைபாடுகளுடன் பிறப்பதாகவும், குழந்தை பிறப்புக்கு பின் தேவையான ஆவணங்களையும் பெற முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இது குறித்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இருளர்கள் குடியிருக்கும் பகுதியில் முழு ஆய்வு நடத்த வேண்டும். இதுமாதிரி பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சிறுமிகளை மீட்டு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து அவர்களை காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும். அதேபோல் இருளர் இன பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, குறிப்பிட்ட பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close