தமிழ்நாட்டில் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பணையை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதால் தொழில்நுட்ப அம்சங்களை காரணம் காட்டி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் நான்கு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஜெய் சுக்கிரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக 2ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட அத்தனை முயற்சியும் முழுமையாக மேற்கொண்டிருக்கிறோம் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்வி, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் தொகுதி மறு வரையறை பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், இது குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?