தடுப்பணையில் மீன் பிடிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன் ஒருவர் ஆற்றுச் சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் ஆற்றுப்பாலத்தில் மீன் பிடிக்க சென்ற, 10-ம் வகுப்பு மாணவன் முத்தரசன்(15) ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போடி தீயணைப்பு மீட்பு படையினர், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முத்தரசனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க மற்றொரு புறம், சிறுவன் முத்தரசனை தேடுவதற்காக அவரது சித்தப்பா பரமசிவமும் ஆற்றில் இறங்கினார். பரமசிவம் நீரில் தேடிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக அவரும் ஆற்று நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் இருக்கும்போது பரமசிவம் ஆற்றில் மூழ்கி உள்ளார். இதனையடுத்து இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போடி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு