[X] Close
JUST IN

இசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி!

music-festival-in-mayiladudurai-temple

துலா உற்சவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான பாரம்பரிய மல்லாரி இசைக்கச்சேரி நடைபெற்றது. 

மன்னார்குடி மதில் அழகு, திருவாரூர் தேர் அழகு, மயிலாடுதுறை மல்லாரி அழகு என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மயூரநாதர் ஆலயத்தில் வாசிக்கப்படும் மல்லாரி இசை புகழ்பெற்றதாகும். 

நாதஸ்வரம், தவில் கொண்டு வாசிக்கப்படும் இசைக்கு மல்லாரி வாசித்தல் என்று பெயர். திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு செய்யப்படும்போது, சின்னமல்லாரி, தீர்த்த மல்லாரி, திருத்தளிகை மல்லாரி, திரிபுடைதாள மல்லாரி, பெரிய மல்லாரி, திருத்தேர் மல்லாரி என்று பல்வேறு மல்லாரிகள் வாசிக்கப்படுகின்றன. மல்லாரி இசையிலேயே மயிலாடுதுறை மல்லாரி மிகவும் புகழ்பெற்றதாகும். 

பல்வேறு ஊர்களில் இருந்து இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து சுவாமி முன்பு கம்பீர நாட்டையில் மல்லாரி ராகம் இசைப்பது செவிக்கு இனிமையான ஒன்றாகும். மயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம் விழாவில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து மல்லாரி வாசித்தனர். தற்போது, 25பேர் வரை இணைந்து மல்லாரி வாசிக்கின்றனர். 

அதன்படி இன்று மயிலாடுதுறை மயூரநாதர், அபயாம்பகை ஆகியோர் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆலயத்திலிருந்து காவிரிக்கரைக்கு புறப்பட்ட போது 12 நாதஸ்வர இசைக்கலைஞர்கள், 13 தவில் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை இசைத்தனர். பக்தர்கள் பலரும் மயிலாடுதுறை மல்லாரியை பார்த்து ரசித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close