[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

national-scheduled-tribe-commission-sent-notice-to-dmk-udhayanidhi-stalin

முரசொலி அலுவலம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தைச் சேர்ந்தது என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பிலும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுக தலைவர்  ஸ்டாலினும் பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

        

இந்நிலையில், முரசொலி இடம் விவகாரம் தொடர்பான புகாரில், உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

      

உதயநிதி ஸ்டாலின் முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close