[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு

ramkumarai-taken-into-custody-by-the-police-to-investigate-the-petition

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்‌ள ராம்குமாரை ஐந்து நாள் கா‌வலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென இன்று மதியம் ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் அவர் புழல் சிறையிலிருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படலாம் எனத் தெரிகிறது. காவலில் எடுத்து விசாரிப்பதன் மூலம் சுவாதி கொலை தொடர்பாக ராம்கு‌மாரிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர். இதற்காக, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close