வேலூரில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் காணாமல் போயினர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பீடி சுற்றும் கூலித் தொழிலாளி சென்றாயன். இவரது மகன் பிரேம்குமார் (15). அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவக்குமாரின் மகன் பார்த்தசாரதி (15). இந்தச் சிறுவர்கள் இருவரும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டப்பட்டு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை 5 மணி அளவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாக கூறி வீட்டிலிருந்து ஒன்றாக சென்றுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர். மேலும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார். காணாமல் போன இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!
சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்