[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு

40-pawn-jewel-theft-in-ariyalur-temple

அரியலூரில் கோயிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூா் மேலத்தெருவில் பிரசத்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று கோயிலை சுத்தம் செய்யும் பணிப்பெண் லோகாம்பாள் இன்று காலை பணிக்கு வந்துள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டடு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து அர்ச்சகா் சரவணனுக்கு தகவல் கொடுத்தார். சரவணன் வந்து பார்த்த போது சாமி சிலையில் அணுவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பொட்டகத்தில் இருந்த தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அர்ச்சகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷேசம் நடைபெற்றதால் அனைத்து நகைகளும் சாமிக்கு சார்த்தப்பட்டது எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close