[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

கல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்

kanjipuram-maduranthakam-women-college-student-death

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் விழுந்த மாணவி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இரு குன்றபள்ளி பகுதியில், பெண்களுக்கான தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம், வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா(19) என்பவர் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் கல்பாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.25.மணியளவில் கிருஷ்ணபிரியா, கல்லூரியில் உள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். 

உயிருக்கு போராடிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கிருஷ்ணப்பிரியா சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

கிருஷ்ணபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close