[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

4-college-students-death-in-train-accident

கோவை ராவுத்தர்பாலம் அருகே ரயில் மோதி 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

கோவை ராவுத்தர்பாலம் அருகே ரயிலில் மோதி உடல்கள் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த போலீசார் நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் சித்திக், கருப்பசாமி, கவுதம் உள்ளிட்ட நான்கு பேர் என்பதும் இவர்கள் கொடைக்கானல் மற்றும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர்கள் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்கவர்களாக உள்ளனர். இவர்கள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் இறுதியாண்டு படித்து வந்தனர். மேலும் இரண்டு பேர் அரியர் தேர்வு எழுத வந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

நான்கு பேரும் ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close