பெயிண்ட் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்த திருடன், தப்பிக்க சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கொள்ளையடித்தச் சம்பவம் சென்னை செங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது.
செங்குன்றம் அடுத்த காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. வழக்கம் போல கடையை திறந்த போது கல்லாவில் இருந்து ரூ50 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.
அதில், கொள்ளையன் கடையின் மேற்கூரை வழியாக வந்து சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது. பின்னர் கொள்ளையன் சிசிடிவி கேமராவை முன்பு இருந்த மாதிரியே திருப்பி வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.
இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்