நெல்லையில் உள்ள திருவள்ளுவர் ‘இரட்டைப் பாலத்தை’ புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசியாவிலேயே முதன்முதலாக ரயில்வே இருப்புப் பாதை மேலாக கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப்பட்டது. 1970ஆம் ஆண்டு இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்ட தொடங்கி 13.11.1973ல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மேல்பாலம் வில் வடிவில் கட்டப்பட்டிருக்கும், அதன் கீழ் மற்றொரு பாலம் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பாலத்திற்கு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ‘திருவள்ளுவர்’ மேம்பாலம் என பெயரிட்டார். 45 ஆண்டுகளை கடந்து இன்று பிறந்தநாள் காணும் இந்த மேம்பாலம், இன்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களை தன் மீது சுமக்கிறது. இருப்பினும், போதிய பராமரிப்பின்றி இடங்களில் சேதமாகி நிற்கிறது. இதனை புதுபித்து வண்ணங்கள் திட்ட வேண்டும் என நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!