[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

வீட்டு வாசலிலேயே ரியல் எஸ்டேட் வியாபாரியை வெட்டிக் கொன்ற கும்பல் - சிசிடிவி காட்சி

real-estate-businessman-murder-news-in-virudhunagar-district

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது மனைவி வசந்தி. விருதுநகர் அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் அலுவலக எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இரவு வீட்டிலிருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. தகவலறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில் அல்லம் பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close