[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாவோயிஸ்ட் மணிவாசகத்துடன் தொடர்பா?: திமுக பிரமுகரிடம் கியூ பிரிவு விசாரணை

q-squard-police-investigation-to-dmk-party-member-about-moist

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்துடன் தொடர்பு வைத்திருந்த புகாரில் சேலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அட்டபாடி வனத்துக்குள் உள்ள மஞ்சகண்டி என்னுமிடத்தில் கேரள காவல்துறையினர் ‌நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட்ட் அமைப்பைச் சேர்ந்த மணிவாசகம் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ‌இந்தநிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், மாவோயிஸ்ட் மணிவாசகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக அவரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விஜயகுமார் இல்லத்தில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. பல மணி நேர விசாரணைக்குப்பின் விஜயகுமாரை காவல்துறையினர் விடுவித்தனர். 

 

மாவோயிஸ்ட் மணிவாசகத்துடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், எட்டு வழிச்சாலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மணிவாசகம், சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close