[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி

husband-and-wife-both-reached-100-age-death-simultaneously-in-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பகுடியில் 104 வயது கணவன் இறந்த துக்கத்தில் 100 வயது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு வயதை கடந்தும் இணைபிரியாமல் வாழ்ந்து இறந்த முதியவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்த 104 வயது முதியவர் வெற்றிவேல். இவருடைய மனைவி 100 வயதுடைய பிச்சாயி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் 23 பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேரன்களும் பேத்திகளும் உள்ளனர். 104 வயதான வெற்றிவேல்  நீண்ட காலமாக விவசாயம் செய்து குடும்பத்தை காத்து வந்தார். 

           

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த வெற்றிவேல் இன்று காலை திடீரென உயிரிழந்தார். வெற்றிவேல் இறந்ததும் அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி மரியாதை செய்வதற்கான பணிகளை செய்து வந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நூறு வயது ஆன பிச்சாயி, கணவன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். 

                    

நூறு வயதை கடந்தும் வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத ஜோடியை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 100 வயதை கடந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்து, இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close