காட்பாடியில் பூட்டிய கடையின் முன்பு இருந்த டேபிள் மற்றும் நாற்காலியை மர்ம நபர் திருடிச்சென்றார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் காட்பாடியில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் எழுதுபொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், கடையின் முன்பு வைத்திருந்த டேபிள் மற்றும் நாற்காலி திருடப்பட்டது. இதுதொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடையின் முன்பு இருந்த டேபிள் மற்றும் நாற்காலியை அடையாளம் தெரியாத நபர் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்