[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

தத்தெடுத்த பிள்ளையை காசநோயால் ஒதுக்கி வைத்தார்களா..?: கைகொடுத்த நண்பர்கள்..!

tuberculosis-affected-son-evicted-from-home-in-teni

தேனியில் காசநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை குடும்பத்தினர் கைவிட்டதால் நண்பர்கள் மாட்டுக்கொட்டகை அருகே தற்காலிக அறை அமைத்து பராமரித்து வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தேனியை சேர்ந்தவர் முத்துபாண்டி. பல வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் ஆதரவற்று கிடந்த முத்துபாண்டியை, குழந்தை இன்றி தவித்து வந்த ஒரு குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்பட்ட முத்துபாண்டி இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துபாண்டியை தத்தெடுத்த குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கவே முத்துபாண்டியின் மீதா‌ன அவர்களது அக்கறை குறைந்தகாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் முத்துபாண்டி யாரிடமும் கூறாமல் குடும்பத்தினரிடமிருந்து விலகி கோவையில் உள்ள கல்குவாரியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார். குவாரியில் அதிகளவு மாசு மற்றும் தூசு நிறைந்த சூழலில் பணி புரிந்த முத்துபாண்டி, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மெலிந்து போயுள்ளார். மோசமான உடல்நிலையோடு தேனி திரும்பிய முத்துபாண்டியை, அவர் வேலைபார்த்து வந்த கடை முதலாளி செல்வம் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முத்துபாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காசநோய் இருப்பதாகக் கூறியுள்ளனர். இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கவே, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் முத்துபாண்டியை வீட்டிற்கே வரக்கூடாது என கைவிட்டதாக கூறப்படுகிறது.

முத்துபாண்டியை கண்டுகொள்ளவில்லை என்னும் குற்றச்சாட்டை அவரது பெற்றோர் முற்றிலும் மறுக்கின்றனர். தங்களுடன் இருக்க மனமின்றி முத்துபாண்டியே வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இளைஞரின் அவல நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று இளைஞரை மீட்டு, தற்போது தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close