[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

சென்னை உயர் நீதிமன்ற அனைத்து கதவுகளும் இன்று மூடல் - இதுதான் காரணம் 

as-per-customary-procedure-all-the-doors-of-the-madras-high-court-are-closed-today

ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறைப்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்தக்கட்டடம் கலைநுட்பமாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டடத்திற்கு நீதித்துறையோ, சட்டத்துறையோ சொந்தம் கொண்டாடக் கூடாது எனவும், பழமையான இந்தக் கட்டடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சம்பிரதாய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் பூட்டப்படுகின்றன. அவற்றின் சாவிகள் உயர் நீதிமன்றத்தின் ஓவர்சீஸியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்தச் சம்பிரதாய நடைமுறைப்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும். இந்த நாளின் வெளியாட்கள், போலீசார் என யாரும் உள்ளே செல்ல முடியாது. அதே போல் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஐஎஸ்எப் வீரர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close