[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

போலீசார் இருக்கும்போதே தைரியமாக திருட்டில் இறங்கிய முதியவர்..! அம்பலப்படுத்திய சிசிடிவி..!

old-man-arrested-for-cell-phone-theft

சென்னையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போதே, ஆட்டோவில் இருந்த செல்போனை திருடிச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சேலையூர் அடுத்த செம்பாக்கம், திருமலை நகர் சந்திப்பின் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சவாரி ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ திடீரென நின்று விட்டது. பெட்ரொல் இருக்கிறதா என பரிசோதிக்க ஆட்டோ ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்துள்ளார். அவருடன் சவாரி வந்தவர்களும் ஆட்டோவின் பின்புறம் சென்று என்ன ஆயிற்று எனப் பார்த்துள்ளனர். 

இதையடுத்து ஆட்டோ ஸ்டார்ட் ஆனதும் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்திக் கொண்ட முதியவர் ஒருவர் ஆட்டோவின் பின்புற சீட்டில் இருந்த செல்போனை போலீசார் முன்னிலையிலேயே லாவகமாக திருடிக் கொண்டு சென்றுள்ளார். செல்போன் திருடு போனது தெரிந்த ஓட்டுநர், ஆட்டோ நின்ற இடத்திற்கு அருகே உள்ள கடையில் சென்று சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். 

அதில், முதியவர் போலீசார் முன்னிலையில் செல்போனை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு செல்போன் திருடிய முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close